
விஜய் சேதுபதி, மாதவன் காம்போவில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் விக்ரம் வேதா. புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரேம், கதிர், வரலட்சுமி சரத்குமார் என பலர் நடித்திருந்தனர்.
படத்தின் பாடல்கள், பின்னணி இசை, கதையமைப்பு என பலவும் பட்டித்தொட்டி எங்கும் பரவி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் ஹிட்டடித்தது. தமிழில் இந்த படம் வெற்றி அடைந்ததை அடுத்து, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யவும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான Ynot ஸ்டுடியோ திட்டமிட்டிருந்தது.

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக்கில் என்.டி.ஆர்.பாலாகிருஷ்ணாவும், டாக்டர் ராஜசேகரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் எந்த உறுதியான தகவலும் வெளியிடவில்லை.
இந்தியில் விக்ரம் வேதா படம் ரீமேக் ஆகிறது எனவும் விஜய் சேதுபதி கேரக்டரில் அமீர் கானும், மாதவன் கேரக்டரில் சாயிஃப் அலிகானும் நடிப்பதாகவும் தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இந்தியிலும் இயக்கவுள்ளனர் என அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

இந்த நிலையில், கதையில் அமீர் கானுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை என்பதால் அவர் கதையில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார். இதனையடுத்து, அமீர்கான் கொடுத்த மாற்றங்களை பாலிவுட் எழுத்தாளர்களுடன் கலந்தாலோசித்து இயக்குநர் மாற்றி அமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து படத்தின் ஷூட்டிங் வேலைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழில் விக்ரம் வேதா வெற்றியடைந்த பிறகு புஷ்கர் காயத்ரிக்கு கோலிவுட்டில் அதிக வாய்ப்புகள் வந்தும் அவற்றை தவிர்த்துவிட்டு இந்தி ரீமேக் பணிகளில் மூழ்கியுள்ளனர்.








