சினிமா

நண்பர்களுடன் இணைந்து நியூட்டன் பிரபு தயாரிக்கும் படத்தில் ஹீரோவான கலைஞர் டிவி VJ!

நண்பர்களுடன் இணைந்து நியூட்டன் பிரபு தயாரித்து இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விஜே தணிகை.

நண்பர்களுடன் இணைந்து நியூட்டன் பிரபு தயாரிக்கும் படத்தில் ஹீரோவான கலைஞர் டிவி VJ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கலைஞர் டிவியில் தொகுப்பாளராகப் பணியாற்றும் விஜே தணிகை ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தை நியூட்டன் பிரபு இயக்குகிறார். அணி கிரியேஷன்ஸ் சார்பாக நியூட்டன் பிரபுவே இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு சம்சத் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்க உள்ளார். இவர் மலையாளத் திரையுலகில் இருந்து தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜே தணிகை ஏற்கனவே ‘குற்றம் 23’, ‘தடம்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ‘தொடுப்பி’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், நியூட்டன் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார் தணிகை.

பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஜாக்குவார் தங்கம், ரோபோ ஷங்கர், எழுமின் விஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நண்பர்களுடன் இணைந்து நியூட்டன் பிரபு தயாரிக்கும் படத்தில் ஹீரோவான கலைஞர் டிவி VJ!

இப்படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் நியூட்டன் பிரபு, “இந்தப் படம் ரொமாண்டிக் சைக்கோ திரில்லர் வகையைச் சார்ந்தது. இதில் நாயகனாக கலைஞர் டிவி தொகுப்பாளர் தணிகையும், நாயகியாக அறிமுக நடிகை குயின்ஸ்லியும் நடிக்கின்றனர். வில்லனாக விஜய் டிவி புகழ் பாண்டி கமல் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் சிறப்பு தோற்றத்திலும் பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

நான் இதற்கு முன்பாக பல படங்களுக்கு துணை மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். மேலும், சில குறும்படங்களையும் இயக்கி உள்ளேன். பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பல வருடங்களாக சவுண்ட் இன்ஜினியராகப் பணியாற்றியுள்ளேன். என் அனுபவத்தைக் கொண்டும், அதனால் இணைந்த நண்பர்களை ஒன்றிணைத்தும் இப்படத்தை தயாரிக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories