சினிமா

அட்லி இயக்கத்தில், ஷாரூக் கான் நடிக்கும் ‘ஷன்கி’ : அதிகாரப்பூர்வத் தகவல் நவம்பர் 2ல் வெளியீடு !

ஷாரூக்கானை வைத்து அட்லி இயக்கவிருக்கும் படத்தின் தலைப்பு வெளியானது.

அட்லி இயக்கத்தில், ஷாரூக் கான் நடிக்கும் ‘ஷன்கி’ : அதிகாரப்பூர்வத் தகவல் நவம்பர் 2ல் வெளியீடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லி தற்போது கோலிவுட்டின் மறுக்கமுடியாத இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிக்கனியை மட்டுமே ருசித்து வருகிறார் இளம் இயக்குநர் அட்லி. தற்போது கோடம்பாக்கத்தில் இருந்து நேரடியாக மும்பைக்கே பறக்க இருக்கிறார் அட்லி.

அட்லி இயக்கத்தில், ஷாரூக் கான் நடிக்கும் ‘ஷன்கி’ : அதிகாரப்பூர்வத் தகவல் நவம்பர் 2ல் வெளியீடு !

ஆம். ஷாரூக்கானை வைத்து படம் அட்லி இயக்குக இருக்கிறார் என அண்மையில் செய்திகள் வெளியானது. தற்போது இதனை உண்மையாக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஷாரூக்கான் - அட்லி கூட்டணியில் படம் உருவாகவுள்ளது உறுதியானதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வந்துள்ளது. மேலும், அந்த படத்துக்கு ஷன்கி (Sanki) என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் (நவ.,2) நடிகர் ஷாரூக்கானின் பிறந்தநாள் அன்று வெளிவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஷாரூக்கானின் முந்தைய படங்கள் எதுவும் சொல்லும் அளவுக்கு கைகூடாததால் அதிருப்தியில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆகையால், ட்விட்டரில் #Sanki என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

மேலும், தனது படங்களுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்தாலும் அட்லியின் வளர்ச்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories