சினிமா

அசுரன் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்த பாலிவுட் பிரபலம்!

தனுஷின் அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள நிலையில் இந்தியிலும் ரீமேக்காக உள்ளதாக தகவல்.

அசுரன் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்த பாலிவுட் பிரபலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பூமணியின் வெக்கை நாவலை மையமாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அசுரன்.

சாதிய ரீதியான கொடுமை, வன்மத்துக்கு எதிராகவும், பஞ்சமி நில அபகரிப்பு தொடர்பாகவும் படத்தில் பேசப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடித்துள்ள மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது சொந்த குரலில் தமிழ் பேசியுள்ளார்.

அசுரன் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்த பாலிவுட் பிரபலம்!

பசுபதி, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இன்னும் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் இசை அனைவரையும் உறைய வைத்துள்ளது.

விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அசுரன் படம் சக்கப்போடு போட்டுள்ளதால், தற்போது இந்த படம் தெலுங்கு சினிமாவில் ரீமேக் ஆகவுள்ளது. அதில், தனுஷின் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுரன் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்த பாலிவுட் பிரபலம்!

மேலும் படத்தை இயக்குவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தெலுங்கிலும் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் சுரேஷ் பாபு தயாரிக்க இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அசுரன் படத்தை பார்த்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வியப்படைந்ததாகவும், இந்தி ரீமேக்கில் தானே நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories