சினிமா

“வசூல் சாதனை படைத்த பிகில்” : முதல் 3 நாள் வசூல் நிலவரம் தெரியுமா?

பிகில் படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் நிலவரம் வெளியானது.

“வசூல் சாதனை படைத்த பிகில்” : முதல் 3 நாள் வசூல் நிலவரம் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ம் தேதி வெளியான படம் பிகில். தெறி, மெர்சலுக்கு பிறகு அட்லியின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ளது இந்த படம்.

இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்துஜா, கதிர், விவேக், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன்பும், பின்பும் பல்வேறு விமர்சனங்களுக்கும் சர்ச்சைக்கும் உள்ளானாலும் வசூல் ரீதியில் வழக்கம் போல் நடிகர் விஜய் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளார் என்பதற்கு பிகில் படமும் உதாரணமாக உள்ளது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ.25.6 கோடியாக இருந்தது. அதேபோல உலகளவில் 37 கோடியே 66 லட்சத்துக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிகில் படத்தின் முதல் 3 நாட்களுக்கான வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதில், 100 கோடி ரூபாய்க்கு மேல் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் வசூல் சாதனை படைத்துள்ளது.

மேலும், சென்னையில் மட்டும், முதல் மூன்று நாட்களில் 5.26 கோடி ரூபாய் (1.79+1.73+1.74) வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories