சினிமா

ஜெகன் மோகன் ரெட்டி ஆகிறார் ‘அஞ்சாதே’ அஜ்மல் : காரசாரமாகத் தயாராகிறது ஆந்திர அரசியல் ஹீரோ திரைப்படம் !

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றில் அஞ்சாதே பட புகழ் அஜ்மல் நடிக்கிறார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2008ல் வெளியான ‘அஞ்சாதே’ படம் மூலமாக கோலிவுட் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் அஜ்மல்.

ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதே கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் வெளியான ‘கோ’ படத்தில் வில்லனாக நடித்த அஜ்மலின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இது அவரின் மார்கெட்டையே அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.

ஜெகன் மோகன் ரெட்டி ஆகிறார் ‘அஞ்சாதே’ அஜ்மல் : காரசாரமாகத் தயாராகிறது ஆந்திர அரசியல் ஹீரோ திரைப்படம் !

அஜ்மலுக்கு அடுத்தடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. ஆனால் இப்போது வரை அஞ்சாதே மற்றும் கோ படம் கொடுத்த ஒரு வெற்றி மற்ற படங்களின் மூலம் கிடைக்கவில்லை.

தன்னுடைய கதை தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தியும் கூட அஜ்மலுக்கு அவரை நிலை நிறுத்திக்கொள்ளும் படியான கதைக்களம் அமையவில்லை.

ஜெகன் மோகன் ரெட்டி ஆகிறார் ‘அஞ்சாதே’ அஜ்மல் : காரசாரமாகத் தயாராகிறது ஆந்திர அரசியல் ஹீரோ திரைப்படம் !

இந்த நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் அஜ்மல் நடித்து வருகிறார். இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிப்பில் அரவிந்த் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வருகிறது "Kamma Rajyamlu Kadappa Reddlu " எனும் படம்.

இந்த படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரை வரும் 27ஆம் தேதி வெளியிடவும் இப்படக்குழு முடிவு செய்துள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி ஆகிறார் ‘அஞ்சாதே’ அஜ்மல் : காரசாரமாகத் தயாராகிறது ஆந்திர அரசியல் ஹீரோ திரைப்படம் !

தற்போது ஆந்திராவில் முதலமைச்சராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து இவர் செய்த அரசியல், மக்களைக் கவர மேற்கொண்ட நடவடிக்கைகளால் எழுந்த சர்ச்சைகளையும் கலந்து இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்த சமயத்தில் அவரது பயோபிக் வெளிவந்தால் அதிரிபுதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை.

banner

Related Stories

Related Stories