சினிமா

‘பிகில்’ பட ஃபுட்பால் சீனில் விஜய்க்கு ‘டூப்’பா? - ஷூட்டிங் ரகசியங்களைப் பகிர்ந்த ஏஜிஎஸ் நிறுவனம்!

பிகில் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளது ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம்.

‘பிகில்’ பட ஃபுட்பால் சீனில் விஜய்க்கு ‘டூப்’பா? - ஷூட்டிங் ரகசியங்களைப் பகிர்ந்த ஏஜிஎஸ் நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ள படம் ‘பிகில்’. இது நடிகர் விஜய்க்கு 63வது படமாகும்.

சுமார் 180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரிலீஸுக்கு முன்பே பிகில் படம் 200 கோடிக்கு மேல் வர்த்தகமாகியுள்ளது.

‘பிகில்’ படத்துக்கான பிரத்யேக எமோஜியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை விஜய் ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

‘பிகில்’ பட ஃபுட்பால் சீனில் விஜய்க்கு ‘டூப்’பா? - ஷூட்டிங் ரகசியங்களைப் பகிர்ந்த ஏஜிஎஸ் நிறுவனம்!

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் உணர்வுப்பூர்வமாக படம் அமைந்திருக்கும் என பல்வேறு எதிர்ப்பார்ப்புகளோடு விஜய் ரசிகர்கள் பிகில் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில், பிகில் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் நடித்தது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.

அதில், “படத்தில் அனைத்து ஃபுட்பால் சண்டைக் காட்சிகளிலும் எந்த டூப்பும் இல்லாமல் நடிகர் விஜய்யே நடித்துள்ளார். கால்பந்து விளையாட்டு தொடர்பான காட்சிகள் அனைத்தும் ஏப்ரல், மே மாதத்தில் கடுமையான அக்னி நட்சத்திர காலத்தின் போது படமாக்கப்பட்டது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளில் இருந்து படத்தின் எடிட்டிங் பணியும் நடைபெற்று வந்தது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக Arri Alexa La என்ற நவீன கேமராவில் ‘பிகில்’ படமாக்கப்பட்டுள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, விஜய்யின் துப்பாக்கி படத்தில் வரும் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்த Arri Alexa La என்ற கேமராவில் படம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories