சினிமா

ஜெயிச்சு.. ஜெயிச்சு.. டாக்டர் பட்டம் வாங்கிய சார்லி!

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.

ஜெயிச்சு.. ஜெயிச்சு.. டாக்டர் பட்டம் வாங்கிய சார்லி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான 'பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் நடிகர் சார்லி. ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினின் நினைவாக தனது இயற்பெயரான மனோகரை சார்லி என மாற்றிக்கொண்டார்.

1983ம் ஆண்டு நகைச்சுவை நடிகராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சார்லி இதுவரை 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சினிமா மட்டுமில்லாது கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட சார்லி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை’ என்கின்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார். அதற்கான நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயிச்சு.. ஜெயிச்சு.. டாக்டர் பட்டம் வாங்கிய சார்லி!

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று (அக்.,22) நடைபெற்ற 12வது பட்டமளிப்பு விழாவில் நடிகர் சார்லிக்கு டாக்டர் பட்டம் வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கவுரவித்தார். அப்போது தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் உடன் இருந்தார்.

முன்னதாக, தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் கடந்த 2013ம் ஆண்டு நடிகர் சார்லி MPhil பட்டப்படிப்பு முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, தமிழக முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி எந்த ஆய்வும் செய்யாமலேயே, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories