சினிமா

‘ரஜினி 168’ படத்தில் இரண்டு நாயகிகள்? : ரஜினிக்கு ஜோடியாகிறாரா தேசிய விருது பெற்ற இளம் நடிகை!?

ரஜினிகாந்த்தின் 168வது படத்தில் ஹீரோயின்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ரஜினி 168’ படத்தில் இரண்டு நாயகிகள்? : ரஜினிக்கு ஜோடியாகிறாரா தேசிய விருது பெற்ற இளம் நடிகை!?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினியின் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, படத்தின் போஸ்ட் புரடொக்‌ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தர்பார் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரஜினி ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், ரஜினியின் 168வது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஆக்‌ஷன் கலந்த ஃபேமிலி சப்ஜெக்ட்டில் ரஜினியின் 168வது படம் உருவாகவுள்ளதால், படத்துக்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் சிவா இறங்கியுள்ளார்.

அதன்படி, ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடிப்பதற்காக நடிகை ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஜோதிகா ஒப்புக்கொண்டதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, இரட்டை நாயகிகள் கொண்ட படமாக ரஜினி 168 அமையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், தர்பார் பட வேலைகளை முடித்த பின்னர் இமயமலை சென்றிருந்ததால் ரஜினி சென்னை திரும்பியதும் அவரது 168வது படத்தின் நாயகிகள் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ரஜினி 168’ படத்தில் இரண்டு நாயகிகள்? : ரஜினிக்கு ஜோடியாகிறாரா தேசிய விருது பெற்ற இளம் நடிகை!?

ஏற்கெனவே சந்திரமுகி படத்தில் நடிகை ஜோதிகா நடித்திருந்தாலும், ரஜினிக்கு ஜோடியாக அவரது 168வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானதும், இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories