சினிமா

போட்ரா வெடிய.... ரிலீஸ் தேதி அறிவிப்பால் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள்!

பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

போட்ரா வெடிய.... ரிலீஸ் தேதி அறிவிப்பால் உற்சாகமடைந்த  விஜய் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அட்லீ, விஜய் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ளது ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, இந்துஜா, ஆனந்த்ராஜ், யோகி பாபு, கதிர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. இந்தியாவில் வெளியிடப்பட்ட ட்ரெய்லர்களில் யூடியூபில் அதிக லைக்ஸ் வாங்கிய ட்ரெய்லர் என்கிற பெருமை பிகில் ட்ரெய்லருக்கு கிடைத்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் தேதி வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தீபாவளிக்கு படம் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 25ம் தேதி வெள்ளிக்கிழமை பிகில் திரைப்படம் திரைக்கு வர உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்டோபர் 25ம் தேதி தான் கார்த்தி நடிக்கும் கைதி படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் #BigilReleaseDate என்கிற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories