சினிமா

சென்சாருக்கு போன ‘பிகில்’ படத்தைக் கண்டு அதிர்ந்த தணிக்கைத் துறை - பரபர அறிவிப்பு!

சென்சார் போர்டுக்குச் சென்ற பிகில் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சென்சாருக்கு போன ‘பிகில்’ படத்தைக் கண்டு அதிர்ந்த தணிக்கைத் துறை - பரபர அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 63வது படமாக உருவாகியுள்ள ‘பிகில்’ ரிலீஸு தயாராகி வருகிறது. நயன்தாரா, இந்துஜா, விவேக், கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள ‘பிகில்’ படத்தின் பாடல்கள் விஜய் ரசிகர்களை அதீதமாக கவர்ந்து 2 மில்லியன்களுக்கும் மேலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

சென்சாருக்கு போன ‘பிகில்’ படத்தைக் கண்டு அதிர்ந்த தணிக்கைத் துறை - பரபர அறிவிப்பு!

இந்த நிலையில், பிகில் சென்சாருக்கு சென்றுள்ளது. அதில், படம் தொடங்குவதற்கு முன்பே சென்சார் போர்டுக்கு நன்றி தெரிவித்துள்ளது, கத்திக்குத்து ஏற்பட்டு ரத்தம் தெறிக்கும் காட்சி, கெட்ட வார்த்தைகள், சர்ச்சைக்குள்ளான வசனங்கள் என பலவற்றை மியூட் செய்த தணிக்கை வாரியம் பிகில் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. மேலும், படத்தின் நீளம் 3 மணிநேரத்துக்கு ஒரு நிமிடம் குறைவாக 2 மணிநேரம் 59 நிமிடமாக உள்ளது.

எந்த அப்டேட்டாக இருந்தாலும் உடனுக்குடன் தகவல் அளிக்கும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, சென்சார் தொடர்பாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே, பிகில் படத்தின் சென்சார் சான்றிதழ் இணையத்தில் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். நீக்கப்பட்ட காட்சிகள் மட்டுமல்லாமல் படத்தில் பிகில்/மைக்கேல் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராயப்பன் கதாபாத்திரம் உயிரிழக்க நேரிடும் என்ற தகவல் கசிந்ததாகவும் கூறப்படுகிறது.

சென்சாருக்கு போன ‘பிகில்’ படத்தைக் கண்டு அதிர்ந்த தணிக்கைத் துறை - பரபர அறிவிப்பு!

அட்லீயின் இயக்கத்தில் இதுவரை வெளியான 3 படங்களிலுமே முக்கிய கதாபாத்திரத்தின் கதையை முடித்துவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories