சினிமா

‘தர்பார்’ மோஷன் போஸ்டர் & தீம் மியூசிக் ரிலீஸ் எப்போது? : அனிருத் வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

ரஜினியின் தர்பார் படம் தொடர்பாக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

‘தர்பார்’ மோஷன் போஸ்டர் & தீம் மியூசிக் ரிலீஸ் எப்போது? : அனிருத் வெளியிட்ட அசத்தல் அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

பேட்ட படத்துக்குப் பிறகு தர்பார் படத்துக்கும் இசையமைக்கிறார் அனிருத். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

‘தர்பார்’ மோஷன் போஸ்டர் & தீம் மியூசிக் ரிலீஸ் எப்போது? : அனிருத் வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படம் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் அனிருத் புது அப்டேட் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஏனெனில் இன்று அனிருத்தின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதால் அவருக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அனிருத்தின் ட்விட்டர் பதிவில், “இந்த சிறப்பான நாளில் தர்பார் பட அப்டேட் குறித்து வெளியிடுவது உற்சாகமாக உள்ளது. தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வருகிற நவம்பர் 7ம் தேதி வெளியாகும்” என அறிவித்துள்ளார்.

மேலும், “ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் தர்பார் படம் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு விருந்தாக அமையும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் ரஜினி ரசிகர்கள் #DarbarMotionPoster என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரஜினி படத்தின் தீம் மியூசிக் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். தர்பார் பட தீம் மியூசிக்கும் அவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories