சினிமா

ரிலீஸ் ஆனது அயர்ன் மேனின் ‘டூலிட்டில்’ ட்ரெய்லர்!

‘டூலிட்டில்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ரிலீஸ் ஆனது அயர்ன் மேனின் ‘டூலிட்டில்’ ட்ரெய்லர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸின் சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்றான அயர்ன் மேன் படம் மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராபர்ட் டோவ்னி ஜே.ஆர்.

கடைசியாக வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் மார்வெல் ரசிகர்கள் மட்டுமல்லாது ஹாலிவுட் ரசிகர்களையும் சேர்த்து இவருக்கு அதிகப்படியான ரசிகர்களை தேடிக்கொடுத்திருந்தது. அந்த படத்தின் க்ளைமேக்ஸ் தாக்கம் இன்றளவும் மார்வெல் ரசிகர்களின் மனதில் இருந்து விலகவில்லை.

ரிலீஸ் ஆனது அயர்ன் மேனின் ‘டூலிட்டில்’ ட்ரெய்லர்!

ராபர்ட் டோவ்னி ஜே.ஆர். என்பதை விட டோனி ஸ்டார்க் அல்லது அயர்ன் மேன் என்ற பெயரே ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது.

இந்த நிலையில் ராபர்ட்டின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Stephen Gaghan இயக்கத்தில் உருவாகி வரும் ‘Dolittle’ படத்தில் இவரோடு சேர்ந்து வன விலங்குகளும் நடித்துள்ளன.

ஜுமாஞ்சியை போன்று காமெடி நிறைந்த அட்வெஞ்சர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories