சினிமா

ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்கை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்கும் மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர்!

விக்ரமின் அடுத்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்கை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்கும் மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடாரம் கொண்டான் படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 4ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகிறார் இர்ஃபான் பதான்.

மேலும், இந்தப் படத்தில் பல்வேறு நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் இர்பான் பதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்கை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்கும் மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர்!

முன்னதாக இமைக்கா நொடிகள் படத்தில் இயக்குனர் அனுராக் காஷ்யாப்பை வில்லனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்திலும், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஹன்சிகா நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories