சினிமா

Let It Go வரிசையில் இணையுமா ‘Into The Unknown’ : வசூலை வாரிக் குவிக்குமா ‘ஃப்ரோஸன் 2’ ? (வீடியோ)

6 ஆண்டுகள் கழித்து வெளியாகும் ஃபுரோஸன் 2 படத்தின் ஸ்பெஷல் லுக்கை வெளியிட்டுள்ளது வால்ட் டிஸ்னி.

Let It Go வரிசையில் இணையுமா ‘Into The Unknown’ : வசூலை வாரிக் குவிக்குமா ‘ஃப்ரோஸன் 2’ ? (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2013ம் ஆண்டு வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்ட ஒரு 3டி அனிமேஷன் திரைப்படம் தான் ‘ஃபுரோஸன்’. டென்மார்க்கை சேர்ந்த எழுத்தாளர் ஹெச்.சி.ஆண்டர்சன் எழுதிய ‘ஸ்னோ குயின்’ எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகளவில் வரவேற்பு கொடுத்தனர்.

சிறு வயதிலேயே பனியை கட்டுப்படுத்தும் அபூர்வ சக்தியை பெறும் இளவரசி எல்ஸா, அவளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் சகோதரி அனா, இவர்கள் இருவரையும் பிரித்து எல்ஸாவை கொல்ல நினைக்கும் அனாவின் காதலன் என அமானுஷ்யங்களுக்கு மத்தியில் அன்பையும் சொல்லிருந்தது இந்த ‘ஃபுரோஸன்’.

இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக 6 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் குறித்து அறிவித்துள்ளது டிஸ்னி. இந்த ‘ஃபுரோஸன் 2’ படம் வரும் நவம்பர் 22ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

முதல் பாகத்தில் Let It Go என்ற பாடலை இடம்பெற்றது போன்று இந்த பாகத்திலும் Into The Unknown என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக அறிவித்து, அதற்கான ஸ்பெஷல் லுக் வீடியோ ஒன்றையும் டிஸ்னி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான 24 மணிநேரத்திற்குள் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

2013ம் வெளியான ‘ஃபுரோஸன்’ முதல் பாகம் உலகளவில் 800 மில்லியன் டாலர் வசூல் செய்து அந்த ஆண்டில் வெளியான ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்திருந்தது. இது போன்றதொரு வசூலையும் வரவேற்பையும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories