சினிமா

“'சிவாஜி' வெறும் பெயர் அல்ல.. தமிழர்களின் கலை பெருமை” : பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு!

காலத்தால் அழியா காவியப் படைப்புகளை கலையுலகிற்கு விட்டுச் சென்ற சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த தினம் இன்று.

“'சிவாஜி' வெறும் பெயர் அல்ல.. தமிழர்களின் கலை பெருமை” : பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அறிஞர் அண்ணாவின் எழுத்தில் உருவான “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற நாடகத்தில் சிவாஜி கதாபாத்திரத்தில் நடித்த, விழுப்புரம் சின்னையா கணேசன் (V.c.கணேசன்) என்பவரின் நடிப்புத் திறமையை பார்த்த தந்தை பெரியார் அவருக்கு சிவாஜி கணேசன் என்ற பெயரைச் சூட்டினார்.

“'சிவாஜி' வெறும் பெயர் அல்ல.. தமிழர்களின் கலை பெருமை” : பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு!

கலைஞர் வசனம் எழுதிய ‘பராசக்தி’ படத்தில் திரையில் அறிமுகமானார். வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சிதம்பரனார், பகத்சிங், திருப்பூர் குமரன் என நம் வரலாற்று நாயகர்களையும் சுகந்திர போராட்ட வீரர்களையும் இன்றைய தலைமுறையினர் காண்பது சிவாஜியின் நடிப்பின் மூலமே என்றால் அது மிகையில்லை.

இவர் நடிப்புக்கு மட்டும் இலக்கணம் அல்ல. ஒருநாள் கூட இவர் படப்பிடிப்புக்கு தாமதமாக சென்றதில்லை. தன் முதல் படத்தின் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். முதல் படத்திற்கு கதை, வசனம், எழுதிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு, தமிழர்களின் நலன் கருதி தன் ஆயுளில் சில ஆண்டுகளை கலைஞருக்கு தருவதாக மேடையிலேயே அறிவித்தார்.

“'சிவாஜி' வெறும் பெயர் அல்ல.. தமிழர்களின் கலை பெருமை” : பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு!

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், பல இந்திய மொழிகளில் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் விருதான ‘கலைமாமணி’, இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன்-பத்மஸ்ரீ, பிரெஞ்சு அரசாங்கத்தால் உயர் பெருமைக்குரியவர் என்ற பொருள் படக்கூடிய செவாலியே விருது, இந்திய சினிமாவின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் சிவாஜி நடிப்பில் வெளியான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

“'சிவாஜி' வெறும் பெயர் அல்ல.. தமிழர்களின் கலை பெருமை” : பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு!

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் "தமிழர்களின் கலை பெருமை" சிவாஜிகணேசன் அவர்களுக்கு சென்னை கடற்கரை சாலையில் சிவாஜி சிலை நிறுவி அவரின் கலைச் சேவைக்கு மேலும் புகழ் சேர்த்தார்.

சிவாஜி திரையில் அழுதால் அரங்கமே அழுதது, சிரித்தால் அரங்கமே சிரித்தது.. சிவாஜி என்பது வெறும் பெயர் அல்ல, தமிழ் சினிமாவின் வரலாறு. இன்று அக்டோபர் 1 ''நடிகர் திலகம்" செவாலியே சிவாஜிகணேசன் பிறந்தநாளில் அவரை நினைவு கொள்வோம்.

banner

Related Stories

Related Stories