உலகம்

டூடுல் வெளியிட்டு தனக்குத்தானே பிறந்தநாள் கொண்டாடிய Google... கூகுள் பிறந்த கதை தெரியுமா?

பிரபல தேடுபொறியான கூகுள், தனது 23-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.

டூடுல் வெளியிட்டு தனக்குத்தானே பிறந்தநாள் கொண்டாடிய Google... கூகுள் பிறந்த கதை தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் கேட்பதைக் கொடுக்கும் கூகுளுக்கு இன்று 23 வயதாகிறது. முக்கிய நிகழ்வுகளை டூடுலாக வெளியிடும் கூகுள், தனது முகப்பில் அனிமேஷன் செய்யப்பட்ட சாக்லேட் கேக் வைத்து தனது பிறந்தநாளை இன்று தானே கொண்டாடியுள்ளது.

1998ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி முதன்முதலாக கூகுள் நிறுவனத்தின் அலுவலகம் கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது. பிறகு 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பாதுகாப்புக்காக உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது கூகுள். இப்படிப் பல வியப்பூட்டும் ஆச்சரியங்களுக்குப் பாத்திரமாக இன்றுவரை கூகுள் திகழ்ந்து வருகிறது.

நூலகத்தில் இருக்கும் நூல்களைத் தேடுவதற்காகவே உருவாக்கப்பட்ட கூகுள் இன்று உலகின் பிரபலமான தேடுபொறியாக விளங்கி வருகிறது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லைவன் லாரி, செர்கி பிரின் என்ற இரண்டு நண்பர்கள்தான் கூகுளின் தந்தைகள்.

கல்லூரியின் ஒரு ப்ராஜெக்ட்டிற்காக ஒரு தேடு தளத்தை ஆன்லைனில் உருவாக்க நினைத்தனர். பின்னர் நூலகத்தில் இருக்கும் நூல்கள், ஆவணங்களைத் தேடுவதற்காகக் கூகுளைப் பயன்படுத்தத் துவங்கினர். இப்படி நூலகத்திலிருந்து துவங்கிய கூகுள்தான் இன்று அபார வளர்ச்சியை எட்டி நிற்கிறது.

கூகுள் 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்டது. முதல் 7 ஆண்டுகளில் கூகுள் செப்டம்பர் 4ஆம் தேதியன்று தான் தனது பிறந்தநாளைக் கொண்டாடியது. இருப்பினும், ஒருமுறை செப்டம்பர் 27ஆம் தேதியன்று கூகுள் தேடுபொறியின் பயன்பாடு சாதனை எண்ணைத் தொட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 27 ஆம் தேதியே ஆண்டுதோறும் கூகுள் பிறந்தநாளாக கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories