சினிமா

வாலி... வைரமுத்துவுடன் ஒப்பிடுவதா? கேள்வி எழுப்பிய ரசிகருக்கு பாடலாசிரியர் விவேக் பதில்!

வாலி, வைரமுத்துவுடன் ஒப்பிடுவதா என ஒருமையில் கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவருக்கு பாடலாசிரியர் விவேக் பதிலளித்துள்ளார்.

வாலி... வைரமுத்துவுடன் ஒப்பிடுவதா? கேள்வி எழுப்பிய ரசிகருக்கு பாடலாசிரியர் விவேக் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாடலாசிரியர் விவேக். தொடர்ந்து சர்கார் உள்ளிட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். இவர் தற்போது பிகில் படத்திலும் பாடல்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் பிகில் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட பாடலாசிரியர் விவேக்கை பாராட்டிய படக்குழு, எம்.ஜி.ஆர்-க்கு கவிஞர் வாலி ஹிட் பாடல்களைக் கொடுத்தது போல, ரஜினிக்கு வைரமுத்து ஹிட் பாடல்களைக் கொடுத்தார். அந்த வரிசையில் விஜய்க்கு விவேக் ஹிட் பாடல்களைக் கொடுப்பதாக வரிசைப்படுத்தியது.

வாலி... வைரமுத்துவுடன் ஒப்பிடுவதா? கேள்வி எழுப்பிய ரசிகருக்கு பாடலாசிரியர் விவேக் பதில்!

வைரமுத்து, வாலியுடன் விவேக்கை ஓப்பிடுவதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் பாடலாசிரியர் விவேக்கை குறிப்பிட்டு இது சுயவிளம்பரமாக இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த விவேக், “இன்னும் 20 வருடம் எழுதினாலும், அவர்களைப் போல என்னால ஆக முடியாது என்று தான் மேடையில் சொன்னேன். இது சுய விளம்பரமா சகோ. போட்டோ மட்டும் பாத்துட்டு கமெண்ட் பண்றீங்க. அப்புறம் நீங்கள் கேட்டதையே மரியாதையாவும் கேட்கலாம் சகோ” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories