சினிமா

"படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது"- ஆதிக்கத்தை எதிர்த்து வாள்வீசும் அசுரன் ட்ரெய்லர்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் "அசுரன்" படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

"படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது"- ஆதிக்கத்தை எதிர்த்து வாள்வீசும் அசுரன் ட்ரெய்லர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வடசென்னை படத்திற்கு பிறகு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ''அசுரன்''. பூமணி எழுதியுள்ள வெக்கை என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஆதிக்கத்தை எதிர்த்து வாள் வீசும் அசுரனாக நடித்து அசத்தியிருக்கிறார் தனுஷ்.

banner

Related Stories

Related Stories