சினிமா

‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாராவுக்கு தெலுங்கு சினிமாவில் தடை? : காரணம் என்ன?

நடிகை நயன்தாரா தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்குத் தடை விதிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாராவுக்கு தெலுங்கு சினிமாவில் தடை? : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ரஜினியின் தர்பார் மற்றும் விஜய்யின் பிகில் படங்களில் கதநாயகியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழி சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாராவுக்கு தெலுங்கு சினிமாவில் தடை? : காரணம் என்ன?

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபல நடிகரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார்.

‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாராவுக்கு தெலுங்கு சினிமாவில் தடை? : காரணம் என்ன?

‘சைரா’ படம் முடிந்து அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் விளம்பர நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்கவில்லை. இதுகுறித்து ராம் சரணின் மேனேஜர் நயன்தாராவை கேட்டபோது ‘படங்கள் அதன் கதையைப் பொறுத்தே வெற்றி பெறுகிறது. ப்ரமோஷனை பொறுத்து அல்ல’ என பதில் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இது சிரஞ்சீவி, ராம்சரண் ஆகியோரை தெரியவர அவர்கள் நயன்தாரா மீது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் தெலுங்கில் நடிப்பதற்கு தடை விதிக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக பட விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என ராம் சரண் ஒப்பந்தம் செய்யும்போதே நயன்தாராவிடம் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories