சினிமா

’அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கின் முக்கிய ரோலில் நடிகர் பிரசாந்த் - படத்தை இயக்குகிறார் கெளதம் மேனன்!

பிரசாந்த் நடிக்கவிருக்கும் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

’அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கின் முக்கிய ரோலில் நடிகர் பிரசாந்த் - படத்தை இயக்குகிறார் கெளதம் மேனன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு நாவலை தழுவி, கடந்த ஆண்டு இந்தியில் வெளியான படம் ‘அந்தாதுன்’. இதில், ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

க்ரைம் த்ரில்லர் கதையாக உருவான இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். வெறும் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 450 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நிகழ்த்தியது.

அந்தாதுன் படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், சீனாவிலும் இந்த படம் வெளியாகி பாராட்டையையும், வசூல் மழையையும் பொழிந்தது.

இந்நிலையில், அந்தாதுன் படத்தின் தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக இயக்குநரும், நடிகருமான தியாகராஜன் அறிவித்திருந்தார். இதில், ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் அவரது மகனும் நடிகருமான பிரசாந்த் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

’அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கின் முக்கிய ரோலில் நடிகர் பிரசாந்த் - படத்தை இயக்குகிறார் கெளதம் மேனன்!

படத்தின் இயக்குநர், நடிகர்கள் என தேர்வுகள் நடைபெறுவதாகவும் தியாகராஜன் கூறியிருந்தார். தற்போது, தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ள அந்தாதுன் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமின் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை முடித்துவிட்ட நிலையில், வருண் நடிக்கும் ஜோஸ்வா அத்தியாயம் ஒன்று என்ற படத்தையும் இயக்கி முடிக்கவுள்ளார். இதனையடுத்து, பிரசாந்த் நடிக்கவுள்ள அந்தாதுன் படத்தின் ரீமேக்கை கையில் எடுப்பார் என செய்திகள் வெளிவந்துள்ளன.

90s காலகட்டத்தில் விஜய், அஜித்துக்கு இணையாக போட்டி போடும் அளவுக்கும் ரசிகர்களை கவரும் அளவுக்கும் வெற்றிப்படங்களை கொடுத்து வந்த பிரசாந்த் சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தாலும், கெளதம் மேனன் இயக்கத்தில் அந்தாதுன் ரீமேக்கில் அவர் நடிக்க இருப்பதால் மீண்டும் கோலிவுட்டில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories