சினிமா

நடிகை சமந்தாவின் அடுத்த பிளான்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் சமந்தா வெப் சீரிஸிலும் களமிறங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தாவின் அடுத்த பிளான்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமா உலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் சமந்தா. தெலுங்கில் படு பிஸியாக இருக்கும் சமந்தாவின் ‘ஓ பேபி’ படம் சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டை செய்து வருகிறது.

இதையடுத்து, விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த ‘96’ படத்தின் ரீமேக்கில் நடித்து முடித்திருக்கும் சமந்தா, பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு தெலுங்கு திரையுலகு பக்கம் சென்ற சமந்தா, தற்போது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள நேரடி தமிழ் படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார்.

நடிகை சமந்தாவின் அடுத்த பிளான்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்நிலையில், சினிமாவிலும் நடித்துக்கொண்டு வெப் சீரிஸ்களிலும் சமந்தா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெப் சீரிஸ் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற எந்த தளத்தில் வெளிவரும் என்றும், யார் இயக்குநர் என்பது குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை. ஆனால் இந்த வெப்சீரிஸ் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் சமந்தாவின் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதற்கிடையே, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை கவனிக்கப் போவதாகவும் செய்திகள் பரவிவந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories