சினிமா

‘விஜய் 64’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு : உற்சாகத்தில் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பிகில் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது. தீபாவளிக்கு பிகில் படம் வெளியாகும் கூறப்பட்ட நிலையில் அக்டோபர் 24ம் தேதியே திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்துக்குப் பிறகு விஜய்யின் அடுத்த படம் யாருடன் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக கூறப்பட்டது. இந்நிலையில் விஜய் 64 திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக XB பிலிம் கிரியேட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டு ‘விஜய் 64’ திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவாளராகவும், ஃபிலோமின் ராஜ் எடிட்டராகவும், ஸ்டன்ட் சில்வா ஃபைட் மாஸ்டராகவும் ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் #Summer2020 என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories