சினிமா

’எனை நோக்கி பாயும் தோட்டா’ - செப்., 6 ரிலீஸ் : இந்த முறை ஏமாற்றாமல் ரிலீஸ் ஆகுமா ?

நடிகர் தனுஷ் நடித்து நீண்ட காலமாகத் திரைக்கு வராமல் இருந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

நடிகர் தனுஷ், கௌதம் வாசுதேவ் மேனனுடன் முதன் முறையாக இணைந்த படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், திரைப்படம் பல ஆண்டுகள் ரிலீசாகாமல் இருந்து வந்தது.

கடந்து இரண்டு வருடங்களாக இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு ரிலீசாகாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் கெளதம் மேனன், தனுஷ் ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது படம் சொன்ன தேதிக்கு வெளியாகுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories