சினிமா

இணையத்தில் வெளியான ‘பிகில்’ படப்பிடிப்பு காட்சி... வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்...

நடிகர் விஜய் நடித்துவரும் பிகில் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வெளியான ‘பிகில்’ படப்பிடிப்பு காட்சி... வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்...
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பிகில்’. மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் ‘மெர்சல்’ படத்தை அடுத்து பிகில் படத்திலும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளார்.

நயன்தாரா, விவேக், இந்துஜா என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். அறிவித்திருந்தது. சமீபத்தில் வெளியான சிங்கப்பெண்ணே பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பிகில் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஜய் பைக் ஒட்டிக்கொண்டு வருகிறார்.

வெளியான விடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக இந்தப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories