சினிமா

ட்விட்டரில் மோதிக்கொண்ட அஜித்-விஜய் ரசிகர்கள் : கடுப்பான கிரிக்கெட் வீரர் கொடுத்த அட்வைஸ்!

படத்தின் வெற்றி, வசூல் என தொடங்கி பர்ஸ்ட்லுக், யூட்யூப் லைக்ஸ் என அஜித் விஜய் ரசிகர்களின் சண்டை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ட்விட்டரில் மோதிக்கொண்ட அஜித்-விஜய் ரசிகர்கள் : கடுப்பான கிரிக்கெட் வீரர் கொடுத்த அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் என்றால் அது விஜய், அஜித் தான். திரையில் இவர்கள் படங்கள் மோதினால், இவர்களின் ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் மோதுவது வழக்கம்.

படத்தின் வெற்றி, வசூல் எனத் தொடங்கி பர்ஸ்ட்லுக், யூடியூப் லைக்ஸ் என புதுப் புது ரூட்டில் சண்டை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சில சமயங்களில் இவர்களின் சண்டை எல்லை மீறிப் போய் அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது. அப்படி ஒரு தான் சமூக வலைத்தளங்களை அதிர வைத்திருக்கிறது.

அஜித் நடிப்பில் ’நேர்கொண்ட’ பார்வை திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் #ஆகஸ்ட்8_தலதரிசனம் என்ற ஹேஷ்டேக்கை வைராலக்கினர். இதற்கு விஜய் ரசிகர்கள் #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி விமர்சித்தனர்.

இதனால் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் #RIPActorVijay என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கடுமையாக கேலி கிண்டல்களை டிரெண்டாக்கினார்கள்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் இந்திய அளவில் டாப் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இது கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ''நாட்டின் பல இடங்களில் மழை, பஞ்சம், குற்றச் செயல்கள் என பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால், நமது மாநிலத்தின் இளம் தலைமுறையினரோ #RIPActorVijay-யை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்'' என்று இந்த வெற்று மோதல்களில் நேரம் செலவழிப்பதை விட்டுவிட்டு, உபயோகமாக ஏதாவது செய்யுங்கள் என்று அஸ்வின் அட்வை கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories