சினிமா

ரசிகர்களை மயக்க வரும் ‘நேர்கொண்ட பார்வை’ பாடல் : நாளை வெளியாகும் என அறிவிப்பு!

நேர்கொண்ட பார்வை படத்தின் அடுத்த பாடல் வெளியீடு குறித்து அறிவித்தது தயாரிப்புக் குழு.

ரசிகர்களை மயக்க வரும் ‘நேர்கொண்ட பார்வை’ பாடல் :  நாளை வெளியாகும் என அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான படம் ‘பிங்க்’. அதன் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 8ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ‘தீ முகம் தான்’ என்ற யுவனின் அதிர வைக்கும் இசையில் உருவான பாடல் வெளியிடப்பட்டது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நாளை மாலை 6 மணிக்கு அஜித் மற்றும் வித்யாபாலன் காம்போவில் உருவான ‘அகலாதே’ என்ற பாடல் வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். மேலும், அஜித், வித்யாபாலன் இடம்பெற்றிருக்கும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, ட்விட்டரில் #Agalaathey என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories