சினிமா

‘அவரு வரட்டும் தடுக்காதீங்க.. ’ : ரசிகரை மேடைக்கு வரச்சொல்லி கட்டிப் பிடித்து ஷாக் கொடுத்த விக்ரம் ! 

ஆந்திர மாநிலம் ஹைதரபாத்தில் நடைப்பெற்ற ‘கடாரம் கொண்டான்’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவரை இன்ப அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் நடிகர் விக்ரம்.

‘அவரு வரட்டும் தடுக்காதீங்க.. ’ : ரசிகரை மேடைக்கு வரச்சொல்லி கட்டிப் பிடித்து ஷாக் கொடுத்த விக்ரம் ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் 56-வது படம் ‘கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் நாளை (ஜூலை19) திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் ஹைதரபாத்தில் நடைபெற்றது. இதில் விக்ரம், அக்சரா ஹாசன், இயக்குனர் ராஜேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

மேடையில் நடிகர் விக்ரம் பேசிக்கொண்டிருந்த போது, விக்ரமின் ரசிகர் ஒருவர் தமிழில் பேசுமாறு கூறினார். மேலும், தான் கோவையிலிருந்து உங்களை பார்க்க வந்ததாக கூறினார்.

இதைக்கேட்ட நடிகர் விக்ரம் அந்த ரசிகரை மேடைக்கு அழைத்தார். மேடைக்கு வந்த அவரை கட்டிப் பிடித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர், மேடையிலிருந்து படக்குழுவினரை ரசிகருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நடிகர் விக்ரமின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories