சினிமா

‘சிங்கப் பெண்ணே... !’ இணையதளத்தில் வெளியான விஜயின் ‘பிகில்’ பாடல் : அதிர்ச்சியில் படக்குழு.. 

நடிகர் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தின் ஒரு பாடல் இணையத்தில் சற்று முன்பு லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

‘சிங்கப் பெண்ணே... !’ இணையதளத்தில் வெளியான விஜயின் ‘பிகில்’ பாடல் : அதிர்ச்சியில் படக்குழு.. 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘பிகில்’ படத்தின் ஒரு பாடல் இணையத்தில் சற்று முன்பு லீக் ஆனது, படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

விஜய்யின் 63-வது படமாக உருவாகியுள்ளது ‘பிகில்’. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

விஜய் டபுள் ரோலில் நடிக்கும் இப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோரும் நடித்துள்ளனர். தெறி, மெர்சல் ஆகிய படங்களுக்குப் பிறகு அட்லீ இயக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி ‘பிகில்’ உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘சிங்கப் பெண்ணே... !’ இணையதளத்தில் வெளியான விஜயின் ‘பிகில்’ பாடல் : அதிர்ச்சியில் படக்குழு.. 

இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. ‘சிங்கப்பெண்ணே...’ எனத் தொடங்கும் பாடல் முழுமையாக இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கிறார்.

‘பிகில்’ ஷூட்டிங்கின்போதே பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் பாடலும் லீக்காகி இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories