சினிமா

வடசென்னை 2 நிச்சயம் வரும்.. வதந்திகளை நம்பாதீர்கள் : அடித்துச் சொல்லும் தனுஷ் ! 

வடசென்னை 2 கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகிய நிலையில், ‘வடசென்னை 2’ திரைப்படம் நிச்சயம் உருவாகும் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

வடசென்னை 2 நிச்சயம் வரும்.. வதந்திகளை நம்பாதீர்கள் : அடித்துச் சொல்லும் தனுஷ் ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது . வட சென்னை மக்களின் வாழ்வியலைப் பிரதிபலித்த அந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதேநேரம் தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக வசூலையும் அள்ளிய திரைப்படமாக அமைந்தது. வடசென்னை படம் வெளியான போதே வடசென்னை இரண்டாம் பாகமும் ஒரு வருடத்திற்குள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் படத்தின் கதையும், காட்சியமைப்பும் ரசிகர்களிடையே ஒருவித ஆர்வத்தை தூண்டி இருந்தது.

வடசென்னை 2 நிச்சயம் வரும்.. வதந்திகளை நம்பாதீர்கள் : அடித்துச் சொல்லும் தனுஷ் ! 

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படம் எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இதன் கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘அசுரன்’ படத்தை அடுத்து ‘வடசென்னை 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்குப் பதிலாக வடசென்னை திரைப்படத்தில் அமீர் நடித்த ராஜன் என்கிற கதாபாத்திரத்தை மையமாக வைத்து வெப் சீரிஸ் உருவாக்க திட்டமிடப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனது ரசிகர்களிடையே இந்த குழப்பத்தை ஏற்படுத்தியது என்னவென்று தெரியவில்லை. ‘வடசென்னை 2’ படம் குறித்து வெளிவரும் தகவல்களை எனது ரசிகர்கள் நம்ப வேண்டாம். என்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வரும் செய்தியே சரியானதாகும். ‘வடசென்னை 2’ திரைப்படம் நிச்சயம் உருவாகும் என்று தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷின் இந்த ட்வீட்டை பார்த்ததும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து #Vadachennai2 என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories