சினிமா

இரண்டாம் பாகமாக உருவாகும் விஜய் சேதுபதி படம் - தயாரிப்பாளர் தகவல் 

வெற்றி அடைந்த படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாரிக்கும் ஸ்டைல், சூது கவ்வும் படத்தையும் விட்டுவைக்கவில்லை. 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மைக் காலமாக தமிழ் திரையுலகில், வெற்றியடைந்த திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது. அதில், சாமி 2, மாரி 2, சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, தேவி 2, சென்னை 28-2 என நிறைய திரைப்படங்கள் வெளியாகின. இதில் சில படங்கள் வணிக ரீதியாகவும், கதை ரீதியாகவும் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில், சமீபத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடிப்பில் வெளியான “இன்று, நேற்று, நாளை” படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருப்பதை பிரபலா சினிமா தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்தார்.

அந்த வரிசையில் 2013ம் ஆண்டு வெளியாக டாப் ஹிட் அடித்த விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்த படம் “சூது கவ்வும்”. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், மூடநம்பிக்கையை மையமாக கொண்டு வெளிவந்த முண்டாசுப்பட்டி, துப்பறியும் கதையம்சமான தெகிடி போன்ற படங்களின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மேற்குறிப்பிட்ட படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories