சினிமா

சினி அப்டேட்ஸ் 5 : ‘விஜய் 64’  படத்தில் 2 நாயகிகள்... புதிதாக ஒரு ‘பார்ட் 2’ படம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாவின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் சில...

சினி அப்டேட்ஸ் 5 : ‘விஜய் 64’  படத்தில் 2 நாயகிகள்... புதிதாக ஒரு ‘பார்ட் 2’ படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு இளம் நாயகிகள் #Vijay64

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜய்யின் 63-வது படமான ‘பிகில்’ படத்தின் பணிகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டிவிட்ட நிலையில், ‘விஜய் 64’ படம் குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன.

சினி அப்டேட்ஸ் 5 : ‘விஜய் 64’  படத்தில் 2 நாயகிகள்... புதிதாக ஒரு ‘பார்ட் 2’ படம்!

'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் 64 படத்தை இயக்கவிருக்கிறார் என்கிற செய்தி சமீபத்தில் உறுதியானது. படத்துக்கு இசை அனிருத் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்துக்காக இரண்டு நாயகிகளை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ‘விஜய் 64’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்ட நிலையில், தற்போது ராஷி கண்ணாவும் படத்தில் இணைந்திருக்கிறார். இந்த கேரக்டரில் நடிக்க முதலில் த்ரிஷாவிடம் பேசியது படக்குழு. ஆனால் த்ரிஷா ஒப்பந்தமாகாத சூழலில் ராஷியை முடிவு செய்திருக்கிறது படக்குழு.

2. இரண்டு மொழிகளில் இரண்டாம் பாகமா? #Indru_Netru_Naalai

ரவிக்குமார் இயக்கத்தில் 2015-ல் வெளியான திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் இப்படம் வெளியானது. அறிவியல் சார்ந்த இப்படத்துக்கு ஏகபோக வரவேற்பு. நான்கு வருடங்கள் கழித்து, இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போவதாக தற்போது அறிவிக்கப்படுள்ளது.

சினி அப்டேட்ஸ் 5 : ‘விஜய் 64’  படத்தில் 2 நாயகிகள்... புதிதாக ஒரு ‘பார்ட் 2’ படம்!

இரண்டாம் பாகத்தை, முதல் பாகத்தை தயாரித்த சி.வி.குமார் தயாரிக்கவிருக்கிறார். ஆனால் முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார், இப்படத்தின் கதை, திரைக்கதையை மட்டுமே எழுத இருக்கிறார். படத்தை அவரின் அசோசியேட் எஸ்.பி.கார்த்தி இயக்கவிருக்கிறார். அதுபோல ஹிப் ஹாப் தமிழாவுக்கு பதில் ஜிப்ரானை உறுதி செய்திருக்கிறார்களாம். அடுத்த வருட சம்மர் ஸ்பெஷலாக இப்படத்தை எதிர்பார்க்கலாம். முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷாலும், கருணாகரனுமே இப்படத்திலும் லீட் செய்கிறார்கள். கூடுதல் தகவல் என்னவென்றால், நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கப் போவதாகவும் தகவல் கசிகிறது.

3. தெலுங்கு நடிகருடன் கைக்கோர்க்கவிருக்கும் லிங்குசாமி!

கோலிவுட்டில் சில ஹிட்டுகளைக் கொடுத்த பிரபல இயக்குநர் லிங்குசாமி. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான், சண்டக்கோழி 2 படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. தவிர, பொருளாதார ரீதியாகவும் சிக்கலில் இருக்கிறார். அதிலிருந்து மீண்டுவர, ராகவா லாரன்ஸூடன் ஒரு படம் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அது கைகூடவில்லை. இறுதியாக தெலுங்கு நடிகர் ஹவிஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

சினி அப்டேட்ஸ் 5 : ‘விஜய் 64’  படத்தில் 2 நாயகிகள்... புதிதாக ஒரு ‘பார்ட் 2’ படம்!

தமிழில் வெளியான செவன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹவிஷ். செவன் படத்தில் இவருடன் ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட ஆறு நாயகிகள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. லிங்குசாமி படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் துவங்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

4. ஜேம்ஸ் பாண்டும் கேப்டன் அமெரிக்காவும் ஒரே படத்தில்!

2017-ல் வெளியான ‘ஸ்டார் வார் ; தி லாஸ்ட் ஜேடி’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘Knives Out’. ஒரு கொலை நடக்கிறது; அதைச் சுற்றிய மர்மத்தை விசாரிக்கும் டிடெக்டிவ் கேரக்டரில் ஜேம்ஸ் பாண்டான டேனியல் க்ரேக் நடித்திருக்கிறார். அவருடன் முக்கிய ரோலில் கேப்டன் அமெரிக்கா கிறிஸ் ஹெவன்ஸும் நடித்திருக்கிறார். நவம்பர் 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது படக்குழு.

சினி அப்டேட்ஸ் 5 : ‘விஜய் 64’  படத்தில் 2 நாயகிகள்... புதிதாக ஒரு ‘பார்ட் 2’ படம்!

5. தமன்னாவின் ‘பெட்டர் மாக்ஸ்’!

2017-ம் ஆண்டு ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அதே கண்கள்’. விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சி.வி.குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தின் இயக்குநர் ரோஹின், அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். சோலோ ஹீரோயின் சப்ஜெக்டில் இவர் உருவாக்கியிருக்கும் படத்தில் நடிக்க தமன்னா ஓகே சொல்லியிருக்கிறார்.

சினி அப்டேட்ஸ் 5 : ‘விஜய் 64’  படத்தில் 2 நாயகிகள்... புதிதாக ஒரு ‘பார்ட் 2’ படம்!

உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக மட்டுமே நடித்துவந்த தமன்னா, நாயகியை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க முதன்முறையாக கமிட்டாகியிருக்கிறார். படத்துக்கு ‘பெட்டர் மாக்ஸ்’ என டைட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடந்துவருகிறது. கூடுதல் தகவல் என்னவென்றால், தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வெளியான ‘அனண்டோ ப்ரம்மா’ படத்தின் தமிழ் ரீமேக் என்றும் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories