சினிமா

ட்ரெய்லருக்கு முன்பே கல்லா கட்டிய விஜய்யின் ‘பிகில்’ : வெளியிடுவது யார் தெரியுமா?

தீபாவளிக்கு வெளியாகவுள்ள விஜய்யின் ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் உரிமை குறித்து ட்விட்டரில் அறிவித்தார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

ட்ரெய்லருக்கு முன்பே கல்லா கட்டிய விஜய்யின் ‘பிகில்’ : வெளியிடுவது யார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஜய், இயக்குநர் அட்லி கூட்டணியில் 3-வது படமாக உருவாகியுள்ளது பிகில். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், இந்துஜா, கதிர், விவேக், யோகி பாபு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. ‘மெர்சல்’ படத்தையடுத்து விஜய் அட்லி கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளார்.

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பிகில்’ படத்தின் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அன்றும் அதற்கு முந்தைய நாளும் வெளியானது. இது அவரது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களையும் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் ‘பிகில்’ படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸை ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனமும், அயல்நாட்டு ரிலீஸை எக்ஸ் ஜென் ஸ்டூடியோ மற்றும் யுனைட்ட இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து வெளியிடுகிறது படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று வெளியிடப்படும் என்று ஏற்கெனவே படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories