சினிமா

நடிகர் சங்கத் தேர்தல்: நாசருக்கு அணிக்கு எதிராக களமிறங்கப் போகும் பாக்கியராஜ், ஜெயம் ரவி

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தற்போதைய நாசருக்கு எதிராக பாக்யராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற இருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கான வாக்குகள் அன்றையத் தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதில், பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு ரமணா, பசுபதி, நந்தா, தினேஷ், ஸ்ரீமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சென்ற முறை இந்த அணியில் இருந்து துணைத்தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்வண்ணன் போட்டியிடவில்லை.

இந்நிலையில், பாண்டவர் அணிக்கு எதிராக ராதிகா, ராதாரவி போன்றோர் போட்டியிடுவதாக தகவல்கள் எழுந்த நிலையில் தற்போது, நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.

அவரது தலைமையின் கீழ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி , உதயா போட்டியிடுகின்றனர். இந்த அணியில் நடிகர் கார்த்தியை எதிர்த்து பொருளாளர் பதவிக்கு நடிகர் ஜெயம் ரவி போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories