சினிமா

நடிகர் சங்கத் தேர்தல் : பாண்டவர் அணி சார்பில் களமிறங்கும் குஷ்பு!

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் : பாண்டவர் அணி சார்பில் களமிறங்கும் குஷ்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 2019 - 2022-ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ளது.

ஜூன் 23-ம் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரில் நடைபெறவிருக்கும் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்தவிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தலைவர் பதவிக்கு மீண்டும் நடிகர் நாசர் போட்டியிடுகிறார்.

நடிகர் சங்க செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட உள்ளனர். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு குஷ்பு, அஜய்ரத்னம், கோவை சரளா, பசுபதி, மனோபாலா உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர். பாண்டவர் அணியின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் கடந்த முறை போட்டியிட்டு பதவி வகித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories