சினிமா

இதை இவ்வளவு நாளாக தவறவிட்டு விட்டேன் - எஸ்.ஜே.சூர்யா வருத்தம் !

மான்ஸ்டர் படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது இதை இவ்வளவு நாள் தவறவிட்டு விட்டேன் என எஸ்.ஜே.சூர்யா வருத்தத்துடன் கூறினார்.

இதை இவ்வளவு நாளாக தவறவிட்டு விட்டேன் - எஸ்.ஜே.சூர்யா வருத்தம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான மான்ஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்து வசூலைக் குவித்து வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்த்லில் எலி ஒன்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

படம் வெற்றியடைந்ததை அடுத்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா, வாலியில் இயக்குநராக ஆரம்பித்து இன்று மான்ஸ்டர் வந்துள்ளது நல்லதை எப்போதும் புழக மறந்ததில்லை இப்படத்திற்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த என் பயணத்திற்காகவும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு நன்றி. என்னுடைய கனவுகளும் ஆசைகளும் அதிகம் ஒரு நடிகனாக சாதிக்க வேண்டும் என எண்னி 25 வருடங்கள் ஓடிவிட்டன.

பாலைவனத்தில் ஒட்டகம் போல , முதல்முறையாக குடும்பங்களை இணைத்துள்ளது மான்ஸ்டர். ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். என்னுடைய படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது இதை இவ்வளவு நாள் தவறவிட்டு விட்டேன் . இந்தி தெலுங்கு என ஒரு கலக்கு கலக்கவேண்டும்.

இதற்கு மேல் தொடர்ந்து நடிகனாக உழைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என நினைக்கிறேன். நான் விருப்ப படும் நடிப்பு மூலம் எனக்கு மதிப்பும் மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன். நல்ல கதை வரவில்லை என்றால் என்னிடம் கதை உள்ளது அதை எடுப்பேன்” என்றார்.

banner

Related Stories

Related Stories