சினிமா

10 ஆண்டுகால வசூல் சாதனையை முறியடிக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்!

உலக அளவில் எதிர்ப்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் கடந்த ஏப்.,26ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது.

10 ஆண்டுகால வசூல் சாதனையை முறியடிக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகளவில் பிரமாண்ட எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி, ஒவ்வொரு மார்வெல் ரசிகர்கனையும் வெறியேற வைத்து, வரலாற்று சாதனைகளை படைத்துக்கொண்டு வருகிறது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம்.

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் எண்ட் கேம், ரிலீசாவதற்கு முன்பே, இந்திய அளவில் மட்டும், முன்பதிவில் சுமார் ரூ.50 கோடி வசூல் செய்திருந்தது.

கடந்த ஏப்.,26ம் தேதி வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் 64 கோடி ரூபாயும், உலக அளவில் 1400 கோடியும் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

இந்தியாவில் சுமார், 2500 தியேட்டர்களில் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆகியும் எண்ட் கேம் படத்தை காண்பதற்கு இன்றளவும் ரசிகர்களின் கூட்டம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படம் உலக அளவில் 2.788 பில்லியன் டாலர் வசூல் சாதனை படைத்தது. ஆனால், தற்போது அவதார் படத்தின் சாதனையை முறியடிக்கும் அளவுக்கு அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் 2.188 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

இன்னும் 10 நாட்களுக்கு இதே நிலை தொடர்ந்தால் அவதார் பட சாதனைகளை மிஞ்சி உலகம் முழுவதும் உள்ள பாக்ஸ் ஆபிஸ் சாதனை பட்டியலில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories