சினிமா

இந்த வார ரிலீஸ் எந்தெந்தப் படங்கள்? ஓர் முன்னோட்டம்! 

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் பண்டிகை விடுமுறை என்றால் டபுள் சந்தோஷம் தான்.  இந்த வார வீக் எண்ட் ரிலீஸ் என்னென்ன படங்கள் என்று தெரிந்து கொள்வோம். 

காஞ்சனா 3
காஞ்சனா 3
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காஞ்சனா 3:

ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கிய முனி, காஞ்சனா , காஞ்சனா 2 படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. தற்போது முனி நான்காம் பாகமாகும், காஞ்சனா மூன்றாவது பாகமுமான ‘காஞ்சனா 3’ படத்தை இயக்கி, நடித்திருக்கிறார் ராகவா. இப்படம் இன்று வெளியாகிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி செம வைரல். காஞ்சனா படங்களில் ஹாரருக்கும், காமெடிக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த ஃபார்முளாவிலேயே இந்தப் படமும் தயாராகியிருக்கிறது. ஆக, இந்தப் படத்துலயும் ஹாரஸ் + காமெடி கன்ஃபார்ம். வேதிகா, ஓவியா, நிக்கி என படத்தில் மூன்று நாயகிகள். தவிர கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் என முந்தைய பாகங்களில் நடித்த நடிகர்களும் இப்படத்திலும் இருக்கிறார்கள்.

மெஹந்தி சர்க்கஸ்
மெஹந்தி சர்க்கஸ்

மெஹந்தி சர்க்கஸ்:

அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் மெஹந்தி சர்க்கஸ். காதலாகி, காதலில் உருகவேண்டுமென்றால் நிச்சயம் இந்தப் படத்துக்கு டிக் செய்யலாம். குக்கூ, ஜோக்கர் என வெற்றிப் படங்களைக் கொடுத்த ராஜூமுருகன் கதை, வசனம் எழுதியிருக்கும், இந்தப் படத்தை சரவணன் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி என புதுமுகங்களே நாயக, நாயகியாக நடித்துள்ளனர். 1900களில் கொடைக்கானல் பகுதியில் நடக்கும் கதைக்களம். சர்க்கஸ் குழு ஒன்று கொடைக்கானல் வருகிறார்கள். அந்த ட்ரூப்பில் இருக்கும் நாயகிக்கும், உயர்சாதியைச் சேர்ந்த நாயகனுக்கும் இடையிலான காதலும், போராட்டமும் தான் கதை. நிச்சயம் இந்தப் படம் உங்களை ஈர்க்கும். ஏனெனில், படத்தின் பிரீமியர் காட்சிகளைப் பார்த்துவிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டிவருகின்றனர்.

வெள்ளைப் பூக்கள்
வெள்ளைப் பூக்கள்

வெள்ளைப் பூக்கள்:

இந்த வாரம் தமிழில் மூன்று படங்கள் தான் வெளியாகிறது. காஞ்சனா 3, மெஹந்தி சர்க்கஸ் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படம் வெள்ளைப் பூக்கள். காமெடியனான விவேக் இந்தப் படத்துல லீட் ரோலில் நடித்துள்ளார். கதைப் படி, விவேக் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. அமெரிக்காவில் ஒரு க்ரைம் நடக்கிறது. அங்கு வசிக்கும் விவேக் அந்த குற்றப் பின்னணியை கண்டுபிடிக்கிறார். த்ரில்லர் கலந்த சஸ்பென்ஸ் திரைப்படமாக உருவாகியிருக்கிறது வெள்ளைப் பூக்கள். காமெடியனாக தான் விவேக்கை ரசித்திருப்போம். இந்த படத்தில் கொஞ்சம் சீரியஸான போஸீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஜெர்ஸி
ஜெர்ஸி

ஜெர்ஸி:

தெலுங்கில் நானி நடிப்பில் ஜெர்ஸி திரைப்படம் வெளியாகியுள்ளது. கௌதம் டின்னனுரி இயக்கியுள்ள இப்படத்தில் நானிக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்துக்கு இசை அனிருத். இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கும் நானி, குடும்ப வாழ்க்கையில் நுழைகிறார். அதன்பிறகு நிறைய அவமானங்களைச் சந்திக்கிறார். பின்னர், 36வது வயதில் மீண்டும் கிரிக்கெட் மட்டையை கையில் எடுக்கிறார். கிரிக்கெட்டில் நானி ஜெயித்தாரா, அவரின் காதல் என்னவானது என்பதே ஜெர்ஸி பட கதை. அனிருத் இசையில் பாடல்களும், படத்தின் டிரெய்லரும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் காதலர்களுக்காகவே, ஐபிஎஸ் சீஸனில் கச்சிதமாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிரன்
அதிரன்

அதிரன்:

சமீபத்தில் விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார் ஃபகத் ஃபாசில். அதன்பிறகு, மலையாள மொழியில் இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அதிரன். ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக சாய் பல்லவி இப்படத்தில் நடித்துள்ளார். ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கேரக்டரில் பிரகாஷ் ராஜ், அதுல் குல்கர்னி, சாந்தி குருஷ்ணா, லேனா, ரஞ்சி பனிக்கர் என பலர் நடித்துள்ளனர்.

கலங்க்
கலங்க்

கலங்க்:

இந்த வாரம் இந்தி மொழியில் கலங்க் படம் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படம், நேற்றுமுன் தினமான எப்ரல் 17ஆம் தேதியே வெளியாகிவிட்டது. வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது இப்படம். மாதுரி டிக்ஷித், சோனாக்‌ஷி சின்ஹா, ஆலியா பட், வருண் தவான், ஆதித்யா ராய் கபூர், சஞ்சய் தத் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அபிஷேக் வர்மன் இயக்கியுள்ளார். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பான 1945ல் நடக்கும் காதல் கதையே படத்தின் களம். படத்துக்கு ப்ரீதம் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி, எதிர்மறை விமர்சங்களே பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.

THE CURSE OF THE WEEPING WOMAN
THE CURSE OF THE WEEPING WOMAN

THE CURSE OF THE WEEPING WOMAN:

ஹாலிவுட்டில் இருந்து இந்த வார வரவு THE CURSE OF THE WEEPING WOMAN. காஞ்சனா 3 படத்துக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு இந்த வாரம் வெளியாகும் ஒரே ஹாரர் திரைப்படம் இது தான். மைக்கேல் என்கிற ஹாலிவுட் இயக்குனர் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் ‘us’,‘pet sematary’ என ஹாலிவுட் ஹாரர் படங்கள் இங்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அந்த நிலையில் இப்படமும் இடம் பிடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories