சினிமா

‘மிஸ்டர் லோக்கல்’ திரையிடும் தேதியில் மாற்றம் ! 

‘மிஸ்டர் லோக்கல்’ வரும் மே மாதம் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் திரையிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

‘மிஸ்டர் லோக்கல்’ திரையிடும் தேதியில் மாற்றம் ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இயக்குநர் ராஜேஷ் எம் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் 'மிஸ்டர்.லோக்கல்'. இந்த படம் வரும் மே மாதம் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் திரையிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories