உலகம்
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு மறைமுகமாக உதவுகிறது என்று குற்றஞ்சாட்டியதுடன், இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தார்.
இதனால், இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அந்நாட்டின் ரோஸ்நெஃப்ட், லூக்காயில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைக்க முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் தங்களின் கச்சா எண்ணெய் கொள்முதல் திட்டங்களை மறுபரிசீலனை செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Also Read
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
மும்பையில் நடைபெறும் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025!’ : தமிழ்நாடு அரசு பங்கேற்பு! - முழு விவரம் உள்ளே!