உலகம்
போரால் அழிந்த காசாவை மீட்க 25 ஆண்டுகள் ஆகும் : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 23 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் போரால் சிதைத்த காசாவை முழுமையாக மீட்க 25 ஆண்டுகள் ஆகும் என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ”இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 80% கட்டடங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 94% மருத்துவமனைகள், 90% பள்ளி கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 90% மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் கும்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும். இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகும். காசா நிலப்பரப்பை முழுமையாக மீட்டெடுக்க 25 ஆண்டுகள் ஆகலாம். பட்டினியால் காசா மக்கள் துடித்து வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!