உலகம்
அமெரிக்காவில் சாதிய நிகழ்ச்சியை நடத்திய குஜராத் அமைப்பு - அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கடும் கண்டனம் !
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் குஜராத்தை சேர்ந்த 'லியுவா படிதார் சமாஜ்' என்ற சாதிய அமைப்பு, அமெரிக்காவில் அந்த சாதியை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடுவதற்காக ஒரு வாலிபால் போட்டியை நடத்தியுள்ளது. இதில் அந்த சாதியை சேர்ந்த ஏராளமானோர் கூடியுள்ளனர்.
இது குறித்து டயலன் பட்டேல் என்ற குஜராத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் நபர் ஒருவர் தனது சமூகவலைத்தள பதிவில், "அமெரிக்காவில் 40,000 பேர் எங்கள் சாதியினர். அதில் 8,000 பேர் இங்கு உள்ளனர் குஜராத்தின் ஒரு சில பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறோம்" என்று கூறினார்.
இவரின் இந்த பதிவு பலரின் கண்டனத்தை பெற்ற நிலையில், இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள சாதி வேறுபாட்டை இங்கே இறக்குமதி செய்வதன் மூலம் அமெரிக்காவின் செழுமையையும் சுதந்திரத்தையும் சிலர் சீர்குலைகிறார்கள் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன் கில் கூறியுள்ளார்.,
இது குறித்து தனது சமூகவலைத்தள பதிவில், "அமெரிக்கா தகுதி வாய்ந்தவர்களுக்கான நாடு. இதற்கு காரணம் நம்மிடம் சாதி அமைப்பு இல்லை. இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள சாதி வேறுபாட்டை இங்கே இறக்குமதி செய்வதன் மூலம் அமெரிக்காவின் செழுமையையும் சுதந்திரத்தையும் சிலர் சீர்குலைகிறார்கள். இதன் காரணமாக அமெரிக்காவின் தேசிய மற்றும் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்தியர்கள் பெருமளவில் குடியேறியுள்ள நிலையில், அங்கு இந்தியர்களின் சாதிய மனப்பான்மை குறித்த குற்றச்சாட்டு அடிக்கடி வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!