உலகம்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே அமலுக்கு வந்த போர் நிறுத்தம் : நிரந்தரமாக முடிவுக்கு வருமா போர் ? - விவரம் என்ன ?
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், 15 மாதம் தொடர்ந்த இந்த போரில் தற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்பாடு அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில், 2 மணி நேரம் தாமதமாக இந்திய நேரப்படி, 2:45 மணியளவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
ஹமாஸ் தரப்பில் பிணை கைதிகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில், காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறவுள்ளது. இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தற்காலிகமானதுதான் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இஸ்ரேலிய படைகள் காசாவில் இருந்து வெளியேறியதும்தான் பிணை கைதிகள் விடுவிக்கப்படுவர் என ஹமாஸ் சார்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!” : மு.க.ஸ்டாலின்!
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!