உலகம்
பிரான்சில் 3 மாதத்தில் பதவியிழந்த பிரதமர் : எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி !
பிரான்சில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்லில் ஆரம்பத்தில் இருந்தே இடதுசாரிகள் கூட்டணி New Popular Frontக்கும் - ஜனாதிபதி இம்மானுவேல் மேக்கரானின் மையவாத Ensemble கூட்டணிக்கும் போட்டி இருந்து வந்தது. அதே போல தீவிர வலதுசாரி கட்சியான National rally கூட்டணியும் கடும் போட்டியளித்தது.
எனினும் தேர்தல் முடிவுகளில் இடதுசாரி கூட்டணிக்கு 180 இடங்களும், மையவாத கூட்டணியாக Ensemble-க்கு 159 இடங்களும், வலதுசாரி கூட்டணியான National rallyக்கு 142 இடங்களும் கிடைத்தது. அதே நேரம் பெரும்பான்மைக்கு தேவையான 289 இடங்களில் யாரும் வெற்றிபெறாத நிலையில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி இம்மானுவேல் மேக்கரானின் மையவாத Ensemble கட்சிக்கு வலதுசாரி கூட்டணியான National rally ஆதரவு கொடுத்ததால் மிஷேல் பார்னியே என்பவர் பிரதமராக பொறுப்பேற்றார். வெறும் 3 மாதங்களே அவர் பிரதமராக இருந்த நிலையில், அவர் மீது இடதுசாரி கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில், மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில் 331 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்ததால் பிரதமர் மிஷேல் பார்னியேரின் அரசு கவிழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மிஷேல் பார்னியே தனது ராஜினாமா கொடுத்ததை ஜனாதிபதி இம்மானுவேல் மேக்கரானிடம் வழங்கினார். இதனிடையே அதிபர் இம்மானுவேல் மேக்கரானும் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சியால் கோரிக்கை விடுத்து வருவதால் பிரான்சில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!