உலகம்
ஹஜ் புனித பயணம் : சவூதி சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தான் மக்கள் : சவூதி அரசு கடும் எச்சரிக்கை !
கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.
அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை
பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக உலகவங்கி, ஐஎம்எப் ஆகிய நிறுவனங்களிடம் கையேந்தி வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.25 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுவிட்டதாக உலக வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது.
மேலும் பாகிஸ்தானின் இந்த நிலை காரணமாக அங்கிருக்கும் பலர் சவூதி அரேபியா சென்று பிச்சை எடுத்து வரும் அவலநிலையும் தொடர்ந்து வெளிவந்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித பயணம் செல்லும் சில பாகிஸ்தானியர்கள் அங்கு பிச்சை எடுத்து வருவதாகவும், அங்கு சிறு திருட்டு வேளைகளில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஏற்கனவே சவுதி அரசு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து பிச்சை எடுப்பவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு மீண்டும் எச்சரிகை விடுத்திருக்கிறது.
இது குறித்து சவுதி அரேபியாவின் மத விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹஜ் புனித பயண விசாவினைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து சவுதி வருபவர்கள் இங்கு வந்து பிச்சை எடுப்பதை பாகிஸ்தான் அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது பாகிஸ்தானின் உம்ரா மற்றும் ஹஜ் யாத்ரீகர்களை எதிர்மறையாகப் பாதிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”