உலகம்
வெடித்துச் சிதறிய ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் : 8 பேர் பலி, 2,800 பேர் காயம்... பின்னணியில் இஸ்ரேல் ?
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், லெபனான் நாட்டில் ஆயுதக் குழுவினர் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஆயுதக் குழுவினர் தகவல் தொடர்புக்காக செல்போன்களுக்கு பதில் பேஜர் கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் நேற்று இவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பேஜர் கருவுகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இந்த நிகழ்வில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதோடு 2,800 பேர் காயமடைந்ததாகவும் அதில் 200 க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. பேஜர் கருவிகளில் சில சிக்னல்களை மறித்து, அந்தக் கருவிகளை வெடித்து சிதறவைத்ததாக இஸ்ரேல் மீது லெபனானின் முக்கிய போராளி அமைப்பான ஹிஸ்புல்லா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!