உலகம்
பள்ளி மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: 6 ஐ.நா ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் பலி... உலக நாடுகள் கடும் கண்டனம்!
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.
மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது தவிர 23 லட்சம் பொதுமக்கள் காசாவில் அகதிகளாகியுள்ளனர்.
இப்படி அகதிகளானவர்களுக்கான பள்ளி ஒன்று மத்திய காசா பகுதியில் ஐ.நா.வால் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நேற்று முன்தினம் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 6 ஐ.நா ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். “ இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாத்” என ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும் ஹாமாஸ் அமைப்பினரின் குழு ஒன்று அந்த பள்ளியில் செயல்பட்டு வந்ததாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !