உலகம்
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக மாபெரும் போராட்டம் : பணயக்கைதிகள் உயிரிழப்பால் ராஜினாமா செய்ய கோரிக்கை!
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே போலியோ பாதிப்பு காரணமாக 3 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில், 25 ஆண்டுகளுக்கு பிறகு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஐ.நா சார்பில் அவசரமாக போர் நிறுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்று இஸ்ரேல் அரசு 3 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இந்த சூழலில் காசாவில் இருந்த சுரங்கத்தில் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 6 பேரின் சடலங்களை இஸ்ரேல் படையினர் கைப்பற்றினர். இது இஸ்ரேலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூக்கு எதிராக இஸ்ரேலில் பொதுமக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த போராட்டத்தில் மீதம் இருக்கும் 101 பிணையாளிகளையாவது உயிரோடு கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. மேலும், பிணை கைதிகள் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று இஸ்ரேல் அரசு [பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே இஸ்ரேலிய தொழிலாளர்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்குள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?” : ‘அன்புக்கரங்கள்’ திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பதிலடி!
-
“IPL போல அதிமுகவில் APL போட்டி நடத்தலாம்” - அதிமுகவின் பல அணிகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் கிண்டல்!
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!