உலகம்
அகதிகள் முகாமில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் : 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி... இஸ்ரேல் கூறியது என்ன ?
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
இந்த நிலையில், காசாவில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கிழக்கு காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்று தற்போது அகதிகள் முகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.
இதில், அங்கு வசித்த 100க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அகதிகளாக தங்கியிருந்த மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பும், ஹமாஸ் அமைப்பின் முக்கிய மையமாக அந்த பள்ளி செயல்பட்டு வந்ததால் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவமும் கூறியுள்ளது.
Also Read
-
அம்மோனியா வாயுக் கசிவு: “எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது” - உதயநிதி வலியுறுத்தல்!
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!