உலகம்
சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவும் ரிஷி சுனக்... வெளிவந்த பிரிட்டன் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு !
பிரிட்டனின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டு பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.இவர் பதவியேற்றதும் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டு பிரிட்டனின் பிரதமராக செயல்பட்டு வருகிறார். இவர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் கன்சர்வேடிவ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.
இதனிடையே பதவி காலம் முடியும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தப்போவதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அதன்படி இன்று பிரிட்டனின் பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை சந்திப்பார் என்ற கருத்து கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
ரிஷி சுனக் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து அவர் எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆனால் தற்போது பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சிக்கு எதிரான அலை எழுந்துள்ளது. கருத்து கணிப்பு முடிவுகளில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 516 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் ஆளும் கட்சியான பழமைவாத கட்சிக்கு வெறும் 56 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு பிரதமர் ரிஷி சுனக் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கருத்து கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது .
Also Read
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!